என் ஆசை



ஆசை ஆசை
மனத்துகுள்ளே ஆசை..
பறந்து கொண்டு செல்ல
யாரிடம் சொல்ல..
மழையில் ஆட ஆசை
அடர்ந்த காட்டில் செல்ல ஆசை
மலை ஏற ஆசை
கடலில் கத்த ஆசை
வானில் பறக்க ஆசை
தனியே பயணிக்க ஆசை
கண்டம் கடக்க ஆசை
இரவில் உலாவ ஆசை
மலையில் வாகனம் ஓட்ட ஆசை
காலத்தை கடந்திட ஆசை
கணிணி உள்ளே பயணிக்க ஆசை
மாறா நேரத்தை கைகளால் மாற்றிட ஆசை
பொன்னியின் செல்வனை சந்திதிட ஆசை
வந்தியத்தேவனிடம் உரையாட ஆசை
இளைய பல்லவனோடு கப்பலோட்ட ஆசை
இன்றைய செயற்கை வளர்ச்சியில்
அன்றைய இயற்கை உலகில்
வாழ்ந்திட ஆசை..
ஆசை ஆசை என்னுடைய ஆசை….
– உங்களில் ஒருத்தி

Comments